Thursday, October 7, 2010

சென்னை நடராஜ் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை

சென்னை நடராஜ் திரையரங்கில் அனுசரிக்கப் பட்ட நட்சத்திர வாரத்தில் 03.10.2010 அன்று நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரையிடப்பட்டது. அதை மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.
ரசிகர்களை வரவேற்கும் பேனர்களில் ஒன்று
அரங்கின் வாயிலில் கூடியிருந்த ரசிகர்களில் ஒரு பகுதி
ஒரு ரசிகர் போஸ்டரில் நடிகர் திலகத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி
ரசிகர்கள் போஸ்டருக்கு சூடம் காண்பிக்கும் காட்சி
நன்றி யூட்யூப் இணையதளம்
courtesy: Youtube
கொண்டாட்டத்தின் ஒரு பகுதி
அரங்கின் நுழைவாயிலில் வைக்கப் பட்டிருந்த போஸ்டர்கள்
ஆறு மனமே பாடல் காட்சி துவங்குவதற்காக கையில் சூடத்துடன் ரசிகர்கள் தயாராக இருக்கும் காட்சி
ஆறு மனமே பாடல் காட்சியின் போது ரசிகர்கள் உணர்ச்சியின் மிகுதியில் ஆரவாரம் செய்யும் காட்சி
படம் முடிவடையும் தறுவாயில் நிறுத்தப் பட்டு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆறு மனமே ஆறு பாடல் மீண்டும் திரையிடப் பட்டது. கிளம்பிய ரசிகர்கள் நின்று மீண்டும் அப்பாடல் காட்சியைக் கண்ட காட்சி.

நடராஜ் திரையரங்கில் வைக்கப் பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் படம்

Monday, September 6, 2010

சென்னை ஸ்டார் திரையரங்கில் ஆண்டவன் கட்டளை

சென்னை ஸ்டார் திரையரங்கில் 07.09.2010 முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் மூன்று காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் உனனதத் திரைக்காவியம் ஆண்டவன் கட்டளை திரையிடப்படுகிறது.

Sunday, September 5, 2010

சென்னை சரவணா திரையரங்கில் உத்தம புத்திரன்

பழைய படங்களை ஆர்வத்துடனும் கடமையுணர்வுடனும் திரையிட்டு வரும் சென்னை சரவணா திரையரங்க நிர்வாகிகளுக்கு முதலி்ல் நமது பாராட்டுக்கள். குடும்பத்துடன் திரையரங்கில் பார்க்கக்கூடிய படங்கள் குறைந்து வரும் கால கட்டத்தில் பழைய படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவதில் வியப்பில்லை. அந்த வரிசையில் கடந்த 03.09.2010 முதல் சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியமான உத்தம புத்திரன் திரையிடப் பட்டு வெற்றி நடைபோட்டு வருகிறது. அதனையொட்டி திரையரங்கில் 05.09.2010 ஞாயிறு மாலைக் காட்சிக் கொண்டாட்டங்கள் உங்கள் பார்வைக்கு. இதனைப் பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் படிக்கலாம்





Tuesday, August 10, 2010

சென்னை பாரத் திரையரங்கில் புதிய பறவை

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கில் 06.08.2010 முதல் புதிய பறவை திரையிடப் பட்டது. நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் இத் திரையரங்கிற்கு தனி சிறப்புள்ளது. ஆம், நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான பராசக்தி முதல் வெளியீட்டில் இங்கு திரையிடப்பட்டது. அதே போல் அவரது கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் திரைப்படமும் முதல் வெளியீட்டில் இத்திரையரங்கில் திரையிடப் பட்டது. இது இத்திரையரங்கிற்குக் கிடைத்த தனிச் சிறப்பாகும். 08.08.2010 ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன் சில காட்சிகள் இங்கே புகைப்படமாக உங்கள் முன்.

பேனருக்கு ஆரத்தி
மற்றொரு பேனருக்கு ஆரத்தி
சுவரொட்டிக்கு கற்பூர ஆரத்தி
உள்ளே செல்லும் வரை வெளியில் நடக்கும் கொண்டாட்டங்களை ரசித்தவாறு காத்திருக்கும் மக்கள்
இடது புறம் - மற்றொரு பேனர். வலது புறம் உள்ளே செல்லக் காத்திருக்கும் மக்கள்
மலர் மாலை மற்றும் பழ மாலையால் அலங்கரிக்கப் பட்ட பேனர்
மலர்மாலை மற்றும் பழ மாலையால் அலங்கரிக்கப் பட்ட பேனரின் அருகாமைத் தோற்றம்
உற்சாகத்திற்கு வயது ஒரு பொருட்டல்லவே, அனைத்து வயதினரும் ஆடிப்பாடும் காட்சி
திரையரங்க நிர்வாகி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் கௌரவிக்கப் படுகிறார்
புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கின் பொலிவான தோற்றம்

Sunday, July 25, 2010

ஞாயிறு ஜூலை 25, 2010 அன்றைய மாலைக் காட்சி

25.07.2010 ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்துடன் களை கட்டியது சாந்தி திரையரங்கு. அரங்கு நிறைந்த காட்சியில் ரசிகர்கள் உற்சாகம் ஆர்ப்பரிப்பு, கட்அவுட் அலங்காரக் காட்சிகளைக் காண

ஒளிக் காட்சி - 1

ஒளிக்காட்சி - 2

ஒளிக்காட்சி - 3

ஒளிக்காட்சி - 4

ஒளிக்காட்சி - 5




அரங்கினுள் கொண்டாட்டம்











Friday, July 23, 2010

சாந்தி திரையரங்கில் புதிய பறவை மேலும் சில காட்சிகள்

சென்னை சாந்தி திரையரங்கில் புதிய பறவை வெளியானதையொட்டி அங்கு வைக்கப் பட்ட கட்அவுட் பேனர் காட்சிகள்









Wednesday, July 21, 2010

சென்னை சாந்தியில் புதிய பறவை

அனைத்து சிவாஜி ரசிகர்களின் உள்ளம் குளிரும் வண்ணம் வந்துள்ள செய்தி, சென்னையில் சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான புதிய பறவை 23.07.2010 அன்று வெளியிடப் படுகிறது. இப்படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளின் படங்கள் உங்கள் பார்வைக்கு




Sunday, June 13, 2010

ராஜபார்ட் ரங்கதுரை பாலாஜி திரையரங்கம்

சென்னை ஓட்டேரி செங்கல் சூளை சாலையில் உள்ள சரவணா திரையரங்க வளாகத்தினுள் அமைந்துள்ள, புதுப்பிக்கப்ட்ட திரையரங்கமான பாலாஜியில், 11.06.2010 முதல் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியமான ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப்பட்டது. 13.06.2010 ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் ரசிகர்களின் உற்சாகமான ஆரவாரத்துடன் அமைந்தது.
அன்று அரங்கு நிறைவு எட்டப்படவில்லை எனினும் மிக கணிசமான அளவில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு களித்தனர். நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பு அமைநத காட்சிகளில் ரசிகர்கள் பெருத்த ஆரவாரம் செய்து மகிழ்ந்தது எந்த அளவிற்கு நடிகர் திலகம் அவர்களின் உள்ளத்தில் குடியிருக்கிறார் என்பதைக் காட்டியது. குறிப்பாக அம்மம்மா தம்பி என்று நம்பி பாடல் காட்சியில் அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி ரசித்தது, சோகக் காட்சியில் இப்படிப்பட்ட வரவேற்பைப் பெறக் கூடியவர் நடிகர் திலகம் மட்டும் தான் என்று கூறுவது போல் அமைந்திருந்தது.

இனி அங்கே கண்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.