சென்னை ஓட்டேரி செங்கல் சூளை சாலையில் உள்ள சரவணா திரையரங்க வளாகத்தினுள் அமைந்துள்ள, புதுப்பிக்கப்ட்ட திரையரங்கமான பாலாஜியில், 11.06.2010 முதல் நடிகர் திலகத்தின் உன்னத திரைக்காவியமான ராஜபார்ட் ரங்கதுரை திரையிடப்பட்டது. 13.06.2010 ஞாயிறு அன்று மாலைக் காட்சியில் ரசிகர்களின் உற்சாகமான ஆரவாரத்துடன் அமைந்தது.
அன்று அரங்கு நிறைவு எட்டப்படவில்லை எனினும் மிக கணிசமான அளவில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு களித்தனர். நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பு அமைநத காட்சிகளில் ரசிகர்கள் பெருத்த ஆரவாரம் செய்து மகிழ்ந்தது எந்த அளவிற்கு நடிகர் திலகம் அவர்களின் உள்ளத்தில் குடியிருக்கிறார் என்பதைக் காட்டியது. குறிப்பாக அம்மம்மா தம்பி என்று நம்பி பாடல் காட்சியில் அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி ரசித்தது, சோகக் காட்சியில் இப்படிப்பட்ட வரவேற்பைப் பெறக் கூடியவர் நடிகர் திலகம் மட்டும் தான் என்று கூறுவது போல் அமைந்திருந்தது.
இனி அங்கே கண்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.