சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கில் 06.08.2010 முதல் புதிய பறவை திரையிடப் பட்டது. நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் இத் திரையரங்கிற்கு தனி சிறப்புள்ளது. ஆம், நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான பராசக்தி முதல் வெளியீட்டில் இங்கு திரையிடப்பட்டது. அதே போல் அவரது கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் திரைப்படமும் முதல் வெளியீட்டில் இத்திரையரங்கில் திரையிடப் பட்டது. இது இத்திரையரங்கிற்குக் கிடைத்த தனிச் சிறப்பாகும். 08.08.2010 ஞாயிறு மாலைக் காட்சியில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதன் சில காட்சிகள் இங்கே புகைப்படமாக உங்கள் முன்.
பேனருக்கு ஆரத்தி
மற்றொரு பேனருக்கு ஆரத்தி
சுவரொட்டிக்கு கற்பூர ஆரத்தி
உள்ளே செல்லும் வரை வெளியில் நடக்கும் கொண்டாட்டங்களை ரசித்தவாறு காத்திருக்கும் மக்கள்
இடது புறம் - மற்றொரு பேனர். வலது புறம் உள்ளே செல்லக் காத்திருக்கும் மக்கள்
மலர் மாலை மற்றும் பழ மாலையால் அலங்கரிக்கப் பட்ட பேனர்
மலர்மாலை மற்றும் பழ மாலையால் அலங்கரிக்கப் பட்ட பேனரின் அருகாமைத் தோற்றம்
உற்சாகத்திற்கு வயது ஒரு பொருட்டல்லவே, அனைத்து வயதினரும் ஆடிப்பாடும் காட்சி
திரையரங்க நிர்வாகி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் கௌரவிக்கப் படுகிறார்
புதுப்பிக்கப் பட்ட பாரத் திரையரங்கின் பொலிவான தோற்றம்